கொச்சி,

பிரபல மலையாள பட நடிகரும், டைரக்டருமான ஸ்ரீநிவாசன் ஸ்டோக் எனப்படும் பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

61 வயதான ஸ்ரீநிவாசன் கேரளாவில் கொச்சி பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு நேற்று இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனே கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அவர் நலமோடு இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

கேரளா படவுலகில் பல்வேறு படங்களை தயாரித்தும், இயக்கியும், நடித்தும் வந்திருப்பவர் ஸ்ரீநிவாசன். அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை நகைச்சுவையுடனும்,  குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநிவாசன் சமீபத்தில் வெளியான சலிம்குமார் இயக்கத்தில் உருவான தெய்வமே கைத்தொழும் கே குமரகானம் ( Daivame Kaithozham K Kumarakanam) என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும், 1989ம் ஆண்டு சிறந்த நடிகர் மற்றும் இயக்குனருக்கான கேரள அரசின் விருதும், 2000 ம் ஆண்டில் சாய்ந்த்ஷ்யய்யா சியாமலாவிற்கு மற்ற சமூக விஷயங்களில் சிறந்த திரைப்படத்திற்கான தேசியத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

2008 ம் ஆண்டில் கதா பராயும்போல் ( Katha Parayumbol) சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது – சாய்ந்தவஸ்தைய்யா சியாமாலா படத்திற்காக (Chinthavishtayaya Shyamala)  பெற்றுள்ளார்.