மல்லுவுட் நடிகர், நடிகைகள் சம்பளம் 50 சதம் குறைப்பு..

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடக்காமல் முடங்கி உள்ளது. மலையாள முன்னணி நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷி யன்கள் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும், புதிய சினிமா ஷூட்டிங் எதுவும் இப்போது கிடையாது என மலையாள பட தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது/

இந்நிலையில் கொச்சியில் நடிகர் சங்க நிர்வாக குழுக் கூட்டம் நேற்று நடந்தது. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நடிகர் நடிகைகள் சம்பளம் 50 சதவீதம் குறைப்பது இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதுகுறித்து மம்மூட்டி, மோகன்லால், திலீப். ஜெயராம், துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்ட யாரும் கருத்து தெரிவிக்கவில்லை