டிகை சமஸ்கிருதி, கொச்சி தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்யவுள்ளார்.

‘மை பேன் ராமு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சமஸ்கிருதி, தொடர்ந்து  ‘பிளாக் பட்டர்பிளை’, ‘வேகம்’, ‘நிக்கா’, ‘அனார்கலி’, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.  தெலுங்கு, கன்னடத்திலும்   நடித்துள்ளார்.

 

தமிழில்  ‘காடு’, ‘சேது பூமி’, ‘வில் அம்பு’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமஸ்கிருதி தற்போது ‘கனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரும் கொச்சியை சேர்ந்த தொழில் அதிபர் விஷ்ணு எஸ்.நாயரும், கடந்த இரு வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன்   திருமண நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்தது. தற்போது  சமஸ்கிருதி, தெலுங்கு படம் ஒன்றிலும் தமிழ் படம் ஒன்றிலும் நடித்து வருவதால் அந்தப் படங்களை முடித்திவிட்டு,  அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

வாழ்க, வாழ்க!