”பார்த்திபனும்,கார்த்தியும் எனது சாய்ஸ்’’ -சச்சியின் கடைசி பேட்டி..

”பார்த்திபனும்,கார்த்தியும் எனது சாய்ஸ்’’ -சச்சியின் கடைசி பேட்டி..

48 வயதில் இறந்து போனார், இளம் மலையாள இயக்குநர் சச்சி.

அவரது கடைசி படமான’ அய்யப்பனும், கோஷியும்’’ வசூலும், பெயரும் குவித்தது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீ-மேக்கும் செய்யப்படுகிறது.

அந்த மொழிகளில் யார்? யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சச்சி, தனது கடைசி பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

அந்த பேட்டி இது:

‘’ மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த கோஷி வேடம், கார்த்திக்கு பொருத்தமாக இருக்கும். பிஜுமேனனின் அய்யப்பன் நாயர் கேரக்டருக்கு ஆர்.பார்த்திபன் தான் சரியான நடிகர்.

இந்தியில் அய்யப்பனாக நானா படேகர் தான் எனது சாய்ஸ். கோஷி வேடம் ஜான் ஆப்ரஹாமுக்கு நன்றாக இருக்கும். அல்லது அபிஷேக் பச்சனை நடிக்க வைக்கலாம்.’

இவ்வாறு மனம் திறந்துள்ள சச்சி, மலையாளத்தில் அய்யப்பன் நாயர் வேடத்துக்கு முதலில் தேர்வு செய்த நடிகர்,யார் தெரியுமா?

மோகன்லால்.

‘’ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் அய்யப்பன் நாயர் வேடத்துக்கு மோகன்லால் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.ஆனாலும் அவரது நட்சத்திர வெளிச்சம் எனக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது’’ என்று பேட்டியை முடித்துள்ளார், சச்சி.

மூச்சையும்.

–  பா.பாரதி