கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் ‘சபியும் சுஜத்தையும்’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஆன்லைன்தலத்தில் வெளியாகவுள்ளது.

வரும் ஜூலை 3-ஆம் தேதி ஆன்-லைன் ஸ்டீரிமிங் தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

இப்படத்தை நரிம்புழா ஷானவாஸ் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் விஜய பாபு தனது தயாரிப்பு நிறுவனமான ப்ரைடே ப்ளிம் ஹவுஸ்-ன் கீழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை ஒளிப்பதிவாளர் அனு மூத்தேத் படமாக்கியுள்ளார் மற்றும் தீப்பு ஜோசப் தொகுத்துள்ளார். ஹரி நாராயண் எழுதிய பாடல்களையும், சுதீப் பழநாடு பாடிய பாடல்களையும் இசையமைப்பாளர் M.ஜெயச்சந்திரன் தொகுத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .