பிரபல மலையாளப் பட இயக்குநர் ஷாநவாஸ் மூளை சாவு அடைந்திருந்த நிலையில், இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஷாநவாஸ் (வயது 40) படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதை தொடர்ந்து மலையாளத்தில் கரி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  இதை தொடர்ந்து மலையாள நடிகர் ஜெயசூர்யாவைவைத்து, சூபியும் சுஜாதயும் என்ற பெயரில் படத்தை இவர் இயக்கிய படம் மாபெரும் வெற்றி பெற்றது.

கொரோனா காலக்கட்டத்தில், அவர் டைரக்ட் செய்த சூஃபியும் சுஜாதாயும்  ஓடிடியில் வெளியானது. இதுதான் ஓடிடியில் வெளியான முதல்  மலையாள படம் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையை ஈடுபட்டு வந்தார். இதற்காக அட்டப்பாடி சென்றிருந்த அவருக்கு கடந்த வாரம் திடீரென   மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடடினயாக கோவை கொண்டு வரப்பட்டு, கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உடல்நிலை தொடர்ந்து அபாய கட்டத்தை நோக்கிச் சென்றது.  செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவர் உயிர் பிரிந்துவிட்டதாக இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஷாநவாஸ்  அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.