கோவிட்-19 நெருக்கடியால் நிலவும் ஊரடங்கில், மற்ற மாநில மொழி திரைத்துறைகளைப் போலவே மலையாள திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர், ரம்ஜான் தினங்களில் கிட்டத்தட்ட 7 மலையாள படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் “மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஊரடங்கு முடிந்து, துறை பாதிப்பிலிருந்து மீள வெண்டும் என்றால், நடிகர்களும், கலைஞர்களும் அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும். பேருக்குக் குறைப்பது உதவாது. குறைந்தது 50 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் குமார்.