குடும்பத்தோடு கள்ளநோட்டு அச்சடித்த கேரள நடிகை: பரபரப்பு தகவல்கள்

இடுக்கி:

கேரளாவில் டிவி நடிகை ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டி ருக்கிறார்.

அவர்களிடம் இருந்து ரூ.57 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது மலையாள  சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்ட நடிகை சூரியா (வலது ஓரம்) மற்றும் அவரது தாய், தங்கை

மோடி அரசுபதவி ஏற்றதும் கடந்த 2018ம் ஆண்டு  நவம்பர் 8-ந்தேதி தேதி இரவு திடீரென பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டது.  அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரு.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து புதிய ரூ.2000  மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள கள்ள நோட்டுக்கள், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகே,   கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் வெளியாகி வருகிறது. மாநிலங்கள் தோறும் கள்ள நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக வெளியான  தகவலை தொடர்ந்து  கள்ள நோட்டு அடிக்கும் மற்றும்  மாற்றும் கும்பலை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் போலீ சார்  ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த  நிலையில்  இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் நடைபெற்ற  வாகன சோதனை யின் போது, ஒரு காரில்  சந்தேகதிற்கிடமாக இருந்த சிலரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அந்த காரில் சுமார் 2 லட்சம் அளவிலான  கள்ளநோட்டுக்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய நடத்தியதில்,  இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கும் தொடர்பு  இருப்பது தெரிய வந்தது. கொல் லம் பகுதியில் தனது குடும்பத்தோடு சொசுகு பங்களாவில் வசித்து வந்த அவரது நடவடிக்கைகள் குறித்து போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது பலர் அந்த பங்களாவிற்குள் சென்று வருவது தெரிய வந்தது.  அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பங்களாவுக்கு நுழைந்த போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பங்களாவின் ஒரு அறையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப் பட்டது. அந்த அறையினுள் இருந்து  கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரிணடர்  உள்பட நவீன கருவிகள்  கைப்பற்றப்பட்டன.

அதையடுத்து, அந்த பங்களாவில் வசித்து வந்த  மலையாள டி.வி. நடிகை சூரியா சசிகுமார, அவரது தங்கை சுருதி, அவரது தாயார் ரமா தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் அவர்கள் கடந்த 8 மாதங்களாக  கள்ள நோட்டு அச்சடித்து  புழக்கத்தில் விட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி