இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்..

இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்..
தனது நேரடி அனுபவங்களால் , யுத்த களங்களைக் கதைக்களமாகக் கொண்டு, சினிமா எடுப்பவர் , மலையாள இயக்குநர் மேஜர் ரவி.
ஏற்கனவே அவர் இயக்கிய ‘அரண்’ ‘பிக்கெட்-43 ‘ ஆகிய படங்கள் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மூண்ட போர் குறித்து அலசின.
இப்போது மேஜர் ரவி , இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது எல்லையில் நடக்கும் பிரச்சினை பற்றி விளக்கும் சினிமா ஒன்றை இயக்க உள்ளார்.
இந்த படத்துக்கு ‘ BRIDGE ON GALWAN’  என்று பெயர் சூட்டியுள்ளார்.
’’இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் யுத்த வரலாற்றை இந்த படம் சொல்லும்’’ என்கிறார், ரவி.
’’லடாக்கில் கல்வான் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 60 மீட்டர் கல்வான் பாலத்தின் கட்டுமானம் குறித்து இந்த படத்தின் மைய இழை இருக்கும் ’’என்று கூறும் மேஜர் ரவி ‘’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஷுட்டிங் ஆரம்பமாகும் ‘’ என்றார்.
வழக்கமாகக் கதை நடக்கும் களத்திலேயே அவர் படப்பிடிப்பு நடத்துவார். ஆனால் இந்த முறை கல்வான் பகுதியில் ஷுட்டிங் நடைபெறாது. பதிலாக லே, லடாக் ஆகிய இடங்களில் ஷுட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
-பா.பாரதி.