மலேசிய இடைத் தேர்தலில் அன்வர் இப்ராகிம் அமோக வெற்றி

கோலாலம்பூர்

லேசிய இடைத் தேர்தலில் பிரதமர் மகாதிர் முகமதுக்கு மாற்றாக கருதப்படும் அன்வர் இப்ராகிம் வெற்றி பெற்றுள்ளார்.

மலேசிய நாட்டின் தற்போதைய பிரதமரான மகாதிர் முகமதுவும் பிரபல அரசியல் தலைவருமான அன்வர் இப்ராகிமும் அரசியலில் எதிரிகளாக இருந்தனர். கடந்த மே மாதம் நடந்த மலேசிய பொதுத் தேர்த்லில் இருவரும் கூட்டணி அமைத்தனர். இந்த கூட்டணி வெற்றி பெற்றதால் மகாதிர் முகமது பிரதமர் பதவிக்கு வந்தார்.

அன்வர் இப்ராகிம் மீது ஓரின சேர்க்கை குற்றச்சாட்டு இருந்தது. அதை ஒட்டி அவர் சிறை தண்டனை பெற்றதால் கடந்த தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. ஆகவே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்வர் இப்ராகிமுக்கு பதிலாக மகாதிர் முகமது பிரதமர் ஆனார்.

தேர்தலுக்கு பிறகு விடுதலை ஆன அன்வர் இப்ராகிம் இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த தேர்தலில் 31,016 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் வெறும் 7456 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

அன்வர் தான் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன் அரசியல்வாழ்க்கையில் இது ஒரு மைல் கல் எனவும் கூறி உ ள்ளார். வரும் திங்கள் அன்று அன்வர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார்.

அன்வர் வெற்றி பெற்ற தொகுதியின் வாக்காள்ர்களில் ஒருவரான லீ தான், “நாங்கள் எங்கல் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளோம்” என கூறி உள்ளர். மற்றோர் வாக்காளரான மத் தாயிப் என்பவர்  அன்வர் வெற்றி பெற அல்லாவிடம் வேண்டிக் கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார்.