கொரோனா பரவலை கட்டுப்படுத்த மலேசியாவில் அவசர நிலை அறிவிப்பு..!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந் நாட்டில் ஆளும் கூட்டணிக்குள் பிளவு போன்ற காரணங்களால் அரசியல் சூழலில் பதற்றம் நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டால் பிரதமா் முஹைதீன் யாசின் பதவி பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது.

இந் நிலையில் கொரோனாவை காரணம் காட்டி அவசரநிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே தோ்தலை அறிவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.