ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராட்சசி’ .

இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாகப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது இந்தப் படத்தைப் பார்த்த மலேசியா கல்வி அமைச்சர், வெகுவாக பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பெரிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.