மலேசியா : முன்னாள் பிரதமர் மனைவி கைது

கோலாலம்பூர்

லேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மனைவி ரோஸ்மா மன்சூர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்று பெற்று மகாதீர் முகமது பிரதமரானார்.    ஊழல் குற்றச்சட்டுக்களின் காரணமாக முன்னாள்  பிரதமர் நஜிப் ரசாக் மக்கள் ஆதரவை இழந்து தோல்வி அடைந்தார்.   அவர் மீது 24 வழக்குகள் பதியப்பட்டு அவர் இல்லம், அலுவலகம்,  அவருடைய உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையோர் இல்லங்களில் சோதனை நடைபெற்றது.

சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கிடைத்ததை ஒட்டி அவர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமினில் வந்தார்.  அவரும் அவர் குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.    அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப் பட்டுள்ளது.

இந்த ஊழல் வழக்குகள் தொடர்பாக நேற்று மலேசிய லஞ்ச ஒழிப்பு துறை ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரை கைது செய்துள்ளது.   இவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.   கைதான ரோஸ்மா மன்சூர் மீது பல்வேறு குற்றசாட்டுக்கள் உள்ளன.  இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.