வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு! மலேசியா

கோலாலம்பூா்: மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசு,  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்து அறிவித்த உள்ளது.

மலேசியாவில் இதுவரை  125இறப்புகளுடன் 9,000க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகி யுள்ளன. மேலும் தொற்று பரவாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமா் முஹைதீன் யாசின், உலகின் பிற நாடுகளில் கொரோ நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் தலையெடுத்து வருகிறது. இதனால்,   நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படு கிறது.

மேலும், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன.

இரவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் மட்டுமே மூடப்பட்டு சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. எல்லைகள் மூடப்பட்டிருக்கும், மேலும் நாட்டிற்குள் நுழைவோர் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அரசின் இந்த மற்ற பெரும்பாலான தொழில்கள் எதுவும் பாதிக்காது. பள்ளிகள் திறந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.