கோலாலம்பூர் –  சிங்கப்பூர் இடையே விரைவு ரெயில் : மலேசிய அரசு மறுப்பு

கோலாலம்பூர்

லேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விரைவு ரெயில் அமைக்க பொருளாதார காரணங்களால் மலேசிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாடுகளுடன்  பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.  அதில் கோலாலம்பூர் – சிங்கப்பூர் விரைவு ரெயில் திட்டமும் ஒன்றாகும்.   இந்த திட்டத்துக்கான மதிப்பீடு சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டிருந்தது.  இது இந்திய மதிப்பில் ரூ.1921 கோடி ஆகும்.

இந்த திட்டம் முடிந்தால் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை மணி நேரமாக இருக்கும்.   தற்போது மலேசிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மகாதீர் முகமது இந்த திட்டத்தை தொடர மறுத்துள்ளார்.   அர்சின் பொருளாதார நிலை தற்போது மிகவும் சீர் கெட்டு உள்ளதாகவும் இந்நிலையில் இந்த திட்டத்தை உடனடியாக தொடர இயலாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை ஒட்டி மலேசிய பொருளாதாரத் துறை அமைச்சர் அஸ்மின் அலி, “இது குறித்து நாங்கள் சிங்கப்பூர் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம்.   மலேசியாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை புரிந்துக் கொண்ட சிங்கப்பூர் அரசு இந்த திட்டத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும்,  அதற்காக எந்த ஒரு இழப்பீடும் தேவை இல்லை எனவும் ஒப்புக் கொண்டுள்ளது.   மலேசியாவின் பொருளாதாரம் சீர் அடைந்த பின் இந்த திட்டம் தொடரும்” என அறிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Malaysia govt and Singapore govt agree to postpone $27bn rail project
-=-