கோலாலம்பூர்: வெளிநாட்டு நபர்களுக்கு வேலை வழங்குதல் தொடர்பாக விதிக்கப்பட்ட முந்தைய கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமானம், விவசாயம், தோட்டக்கலைத் துறை உள்ளிட்டவைகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதாவது, உள்நாட்டு தொழிலாளர்களுக்கு அதிக பணி வாய்ப்புகளை தக்கவைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

கொரோனா கால நெருக்கடியை முன்னிட்டே இந்த நடவடிக்கை. ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 67000க்கும் அதிகமான உள்நாட்டினரும், 4700க்கும் அதிகமான வெளிநாட்டினரும் வேலையிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அங்குள்ள சில நிறுவனங்கள் தங்களுக்கான வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவையை வலியுறுத்தின. எனவே, அரசு தரப்பில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவதென முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.