கோலாலம்பூர்:

மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் முகமது பொறுப்பேற்றார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக அவரது வக்கீல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பொறுப்பற்ற முறையில் எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஃபிரிட்ஜில் இருந்து உணவு மற்றும் சாக்லேட்களை போலீசார் சாப்பிட்டுள்ளனர். எனது வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் மீது விளம்பரம் தேட முயற்சி நடந்துள்ளது. இது எனது குடும்பத்தாருக்கு சங்கடத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.