லேசியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  இன்று ஒரே நாளில் புதிதாக 3,027 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1, 28,465 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் கோவிட் தொற்று பரவத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக 24 மணி நேரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது மருத்துவ பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021ம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியதிலிருந்து தினசரி கோவிட் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்கு இலக்கமாகவே இருந்து வந்தது. ஆனால், இன்று  கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே முதல் முறையாக ஜோகூர் பகுதிய்ல்  1,103 பேர் கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. அதுபோல, சிலாங்கூரில் 706 பேரும், சபாவில் 493 பேரும், கோலாலம்பூரில் 316பேரும், பினாங்கில் 111 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், முதன்முறையாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தற்போதைய நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 25,221 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் 142 பேர் சிகிச்சை பெற்றுவரும் வேளையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 63 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இன்று 2,145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன் காரணமாக, குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 102,723  ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்றுக்கு உள்ளான 8 பேர் இன்று உயிரிழந்தனர். இதன்னால் பலியானோர்எ ண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவல்களை, மலேசிய சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது, ஷேர் மார்க்கெட் முதடலீட்டாளர்களைத் கடுமையாக பாதித்துள்ளது.  கோலாலம்பூர் பங்கு குறியீடு இன்று  (வியாழக்கிழமை)  1.2% வரை சரிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.