மலேசியாவில் துவங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்

கோலலம்பூர்: 

லேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசியை பற்றி மலேசிய மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே மலேசிய பிரதமர் தடுப்பூசியை போட்டுக்கொண்டார், இது மலேசியத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரதமரை தொடர்ந்து மலேசிய சுகாதாரத்துறை இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தடுப்பூசி போட்டுக்கொண்டார், அதன்பிறகு மலேசிய சுகாதாரத் துறை ஊழியர் ஒருவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மலேசியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இதுவாகும், இதனால் மலேசியா விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.