கோலாலம்பூர்:

மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மகாதிர் முகமது பதவி ஏற்றார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

மலேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. நஜீப் ரசாக் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

 

இதில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 35 மூட்டைகளில் இருந்து 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.