Random image

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முறிவு : மலேசிய பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர்

சீனாவுடன் முன்னாள் மலேசியப் பிரதமர் செய்துக் கொண்ட 3 ஒப்பந்தங்களை தற்போதைய மலேசியப் பிரதமர் ரத்து செய்துள்ளார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக் மீது ஊழல் புகார் உள்ளதால் அவர் மீது தற்போதைய பிரதமர் மகாதீர் முகமது விசாரணைக்கு உத்தரவிட்டார்.   விசாரனையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நஜிப் ரசாக் தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார்.   மகாதீரின் அரசு நஜிப் ஏற்கனவே செய்துள்ள அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் சீனாவுடன் முந்தைய பிரதமர் செய்துக் கொண்ட 3 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளார்.  இது குறித்து தெரிவிக்கையில் “முந்தைய பிரதமர் செய்துள்ள பல வர்த்தக ஒப்பந்தங்களில் ஊழல்கள் நடந்துள்ளன.   அதனால் அவ்வாறு சந்தேகம் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.   அவை குறித்து விசாரணை நடைபெற்ற பின் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்து புதிய ஒப்பந்தம் செய்ய ஆலோசித்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார்.