மலேசியா: குழந்தையை கொடுமைப்படுத்திய பெண்ணை போலீஸ் விசாரித்தது இப்படித்தான்.. வீடியோ..

மீபத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சி, சமூகவளைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது. சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் ஓடிய அந்த வீடியோவில், 6 வயது சிறுமியை அவரது பாட்டி கொடூரமாக அடிக்கிறார், இதனை மற்றொரு பாட்டி வீடியோ எடுத்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்துள்ளது  இரு பாட்டிகளுக்குள் சமீபத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட…  வீடியோ எடுத்த பாட்டி, சமூக வளைதளங்களில் இதை பரவவிட்டுள்ளார்.

வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சம்பவம் நடந்த இடம் மலேசியாவின் பூச்சோங் பிரடானா என்பதை அந்நாட்டு போலீஸ் உறுதி செய்தது. பிறகு சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார். அவரை  ஏழு நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புகார் கொடுத்த குழந்தையின் தந்தை

இதுதொடர்பாக சுபாங்ஜெயா காவல்துறை அதிகாரி முகமது அஸ்லின் சதாரி, “மலேசிய சட்டவிதிகளின்படி அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.30 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எனது மாமியார் செய்த செயலை மன்னிக்க முடியாது என்றும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அச்சிறுமியின் தந்தை தெரிவித்ததுடன், அந்த கொடுர காட்சியை வீடியோ எடுத்த இன்னொரு பெண்ணையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், கொடூர பாட்டியை மலேசிய போலீசார் விசாரணை செய்யும் காட்சியும் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அந்த காட்சியைப் பாருங்க..