டந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம், விமானியின் சதி காரணமாகவே திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
கடந்த 2014 மார்ச், 8ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இடையில் இந்த விமானம் திடீரென மாயமானது. இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. விபத்து நிகழ்ந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.  மிகப்பெரும்தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால், இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்களைக்கூட  கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
2
அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும்  பலியாகிவிட்டதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. அதே நேரம், அந்த விமானத்தின் உடைந்த முக்கியப் பாகங்களை மீட்கும் வரையில் தேடுதல்  நடவடிக்கைகளைத் தொடரும்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் இன்னமும் கோரிக்கை விடுத்தபடி இருக்கிறார்கள்.
இதையடுத்து இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் கடந்த இரு வருடங்களாக தேடுதல் வேட்டை தொடர்கிறது.  ஏறக்குறைய பெரும்பாலான பகுதிகள்  அலசி ஆராயப்பட்டுவிட்டன. ஆனால் விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
3
அதே நேரம், தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், மொரிசீயஸ், மற்றும் ரியூனியன் தீவுப் பகுதிகளில் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டன.
இதற்கிடையே, விமானம் மாயமானது தொடர்பாக கடந்த மாதம் நியூயார்க் இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அக்கட்டுரையில், “எம்.ஹெச்.370 விமானம் விபத்துக்குள்ளாகவில்லை.  விமானத்தின்  விமானி அஹமது ஷா-வின் சதியால் நேர்ந்த துயரமே.   பெரிய அளவிலான கொலை-தற்கொலை நடவடிக்கை” என்று குறிப்பிட்டிருக்கிறது.
இதை உறுதி செய்யும் விதமாக, “எம்.ஹெச்.370 விமானத்தின் விமானி ஜஹாரி அஹமது ஷா சதி செய்து விமானத்தை கடத்தி இருக்கிறார்” என்று முதன் முதலாக மலேசிய அரசு அறிவித்தது.
1
மலேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய், “விமானியின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிமுலேட்டர் கருவியில் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதி வழியாக விமானத்தை செலுத்துவதற்கான வழித் தடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அதாவது விமானம் செல்லவேண்டிய தடத்தை விட்டு, வேறு தடத்தில் விமானத்தை செலுத்தியிருக்கிறார் விமானி.
மலேசியாவின் தேசிய போலீஸ் தலைமையான காலித் அபுபக்கர், “ கருப்புப் பெட்டி, பைலட் அறை குரல் பதிவு எந்திரம், தரவுப்பதிவு எந்திரம் ஆகியவை கிடைக்காமல் எதையும் சொல்ல முடியாது. ஆனாலும்  விமானி ஷாவின் தற்கொலை-கொலை முயற்சி என்பதையும்  கொள்கை அளவில் மறுக்க முடியாது” என்றார்.