Random image

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

கோலாலம்பூர்

லேசிய முன்னாள்  பிரதமர் நஜீப் ரசாக் ரூ. 1850 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் தோல்வி அடைந்தார்.   முகமது மகாதீர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்.   பதவி ஏற்றதில் இருந்து மகாதீர் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசு நிதியில் முறைகேடு செய்து சொத்துக் குவிப்பு செய்ததாக புகார் எழுந்தது.  இந்த புகார் காரணமாக அவருடைய இல்லம் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடந்தன.   அந்த சோதனையின் போது ரூ. 1850 கோடி மதிப்பிலான வங்கிக் கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டன.  அத்துடன் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டன.

ஊழல் தடுப்புப் பிரிவினர் இது குறித்து நஜிப் ரசாக் மற்றும் அவர் மனைவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தானர்.  இன்று மதியம் கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் இந்த விசாரணை நடந்தது.  அதை ஒட்டி நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்.