ஜோஹர்,
லேசியாவில் உள்ள  பிரபல அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர்.
மலேசியாவின் ஜோஹர் மாகாணத்தில் உள்ள ஜோஹர் பாரு நகரில் உள்ளது  சுல்தானா அமீனா அரசு மருத்துவமனை.
சம்பவத்தன்று மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் பதறியடித்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் என 6 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், அங்குள்ள அரசு மருத்துவமனை வார்டை தீவிர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தவும், மலேசிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த விபத்தில்  மேலும் பலர் தீக்காயம் அடைந்தனர்; சிலர் புகையை சுவாசித்ததால் மயக்கம் அடைந்தனர்.  அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் நோயாளி ஒருவரும், மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்ததாக தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
தவறான மின் இணைப்பு அல்லது மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மலேசிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.