ஆதார் திட்டத்தை மலேசியா பின்பற்றுகிறது

கோலாலம்பூர்

ந்தியாவின் ஆதார் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட மலேசிய அரசு தங்கள் நாட்டில் இது போல திட்டம் அமைக்க உள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனி மனித அடையாளத்துக்காக ஆதார் அட்டையை அப்போதைய அரசு கொண்டு வந்தது. அந்த சமயத்தில் அதை எதிர்த்த பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஆதாருக்கு ஆதரவை அளித்தது. அனத்து அரசு சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் திட்டத்தை தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த செய்தி உலகெங்கும் பரவியது. இதை அறிந்த மலேசிய அரசுக்கு ஆதார் திட்டம் மிகவும் பிடித்துப் போனது. ஆகவே அந்நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மலேசிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் குலசேகரன் தலைமையில் ஒரு குழு இந்தியா வந்து இந்த திட்டத்தை குறித்து ஆலோசனை நடத்தியது. அதன் பிற்கு ஆதார் போன்ற ஒரு திட்டத்தை மலேசியாவில் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கார்ட்டூன் கேலரி