வெளிநாட்டு பணியாளர்கள் சமுதாய பாதுகாப்பு துறையின் கீழ் வர உள்ளனர் : மலேசிய அமைச்சர்

ஜார்ஜ் டவுன், மலேசியா

லேசியாவில் இல்லப்பணி புரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு பணியாளர்களும் சமுதாய பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வர உள்ளதாக அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

மலேசிய நாட்டில் ஏராளமான வெளிநாட்டவர்கள் இல்லப்பணி உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருகின்றனர். தற்பொது சட்டப்படி 19 லட்சம் பேர் இவ்வாறு பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பாதுகாப்புக்காக மலேசிய அரசு பல திட்டங்களை அளித்துள்ளது.

இது குறித்து மலேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் குலசேகரன், “நாட்டில் உள்ள 19 லட்சம் வெளிநாட்டுப் பணியாளர்கள் பணியாளர் ஊதிய திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர். இது தவிர வேறு பல இல்லப் பணியாளர்கள் எந்த ஒரு திட்டத்தின் கீழும் வராமல் உள்ளனர். அதை ஒட்டி சமுதாய பாதுகாப்புத் துறையின் கீழ் அனைத்து பணியாளர்களையும் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் அனைத்துப் பணியாளர்களும் பொதுக் காப்பீடு திட்டத்தின் கீழ் வருவார்கல. அதனால் அவ்ர்களுக்கும் அவர்களை சார்ந்தோருக்கும் ஆயுட்காலம் முழுவதும் காப்பிட்டு முதிர்வுத் தொகை கிடைக்கும். இதற்கான பிரிமியம் வேலை அளிப்போர் செலுத்துவார்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு 1464 வேலை அளிப்போரும் 2016 ஆம் ஆண்டு 1608 பேரும், சென்ற வருடம் 1544 பேரும் இந்த சமுதாய பாதுகாப்புத் துறையில் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த தொகை பணியாளர் நல நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.