குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்திய விவகாரங்களில் மீண்டும் மூக்கை நுழைக்கும் மலேசியா

கோலாலம்பூர்:

ந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மலேசியா பிரதமர் அதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே  காஷ்மீர் விவகாரத்தி லும் இந்தியாவுக்கு எதிராக பேசிய மலேசிய பிரதமர், தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார்.

தற்போது,  குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?  என்று இந்திய அரசுக்கு  மலேசிய பிரதமர் மகாதீர் கேள்வி விடுத்து உள்ளார். இது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்தியஅரசு, அண்டைநாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இஸ்லாமி யர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சட்டதிருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பரவி வருகிறது.

இந்த நிலையில், மலேசிய பிரதமர் மகாதீர் முகமது,  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தச் சட்டத்தால்  மக்கள் பலியாகி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மலேசியா தலைநகரில் கோலாலம்பூரில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.  இதில் கலந்துகொண்டு பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் பேசியதாவது,

“மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமை யைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். எங்கும் குழப்பம், ஸ்திரமின்மை நிலவும். அனைவரும் பாதிக்கப்படுவர்,”  மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

“மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம். இப்போது அந்த இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மலேசிய அரசிலும் இடம்பெற்றுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் அனைத்துக் குடிமக்களும் இணைந்து வாழ்ந்து  வருகின்ற னர்,  “சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற் கான அவசியம் என்ன?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மலேசியப் பிரதமர் மீண்டும் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளதற்கு இந்திய  வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை பெறுவதை துரிதப்படுத்தவே இந்தச் சட்டத்திருத்தம்  கொண்டு வரப்பட்டு உள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம்  விளக்கம் அளித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CAA, CAA against Protest, cab, citizenship act, citizenship amendment act, Mahathir Mohamad, Malaysian PM Mahathir Mohamad s
-=-