சிறையில் இருந்து வெளிவந்த இரு தினங்களில் மீண்டும் திருடியவர் கைது

பெர்னாமா, மலேசியா

சிறையில் இருந்து விடுதலை பெற்ற இரு தினங்களில் ஒரு வாலிபன் மீண்டும் திருடியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியச் சிறையில் போதை மருந்து குற்றங்கள் மற்றும் வழிப்பறிக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு 31 வயது வாலிபருக்கு 8 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.  அவர் தனது சிறை தண்டனை முடிந்து நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.    விடுதலை செய்யப்பட்ட அந்த வாலிபர் மலேசியாவில் உள்ள பெர்னாமா நகருக்குச் சென்றுள்ளார்.

நேற்று பகல் சுமார் 12.30 மணி அளவில் அந்த நகரில் பரபரப்பான ஒரு சாலையில் விடுதலை ஆன வாலிபர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்தபடி சென்றுள்ளார்.   அப்போது அதே சாலையில் ஒரு  பெண் தனது கைப்பையுடன் நடந்து சென்றுள்ளார்.  விடுதலை ஆன வாலிபர் அந்தப் பெண்ணிடம் இருந்து கைப்பையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.

கைப்பையைப் பறி கொடுத்த அந்தப் பெண் இது குறித்து புகார் அளித்துள்ளார்.  அந்தப் பெண்ணின்  கைப்பையில் மலேசியப் பணம் 3000 மற்றும் அடையாள ஆவணங்கள், மற்றும் வங்கி அட்டைகள் இருந்துள்ளன.   இந்த திருட்டை அந்த வழியாக சென்றுள்ள இரு பத்திரிகையாளர்கள் பார்த்து விரட்டிச் சென்றுள்ளனர்.  ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை.

அதையொட்டி  வண்டியின் பதிவு எண்ணை அவர்கள் காவல்துறைக்குத் தெரிவித்துள்ளனர்.   அந்த பதிவு எண் மூலம்  அந்த விடுதலை பெற்ற வாலிபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.   அவருடன் வந்த  நண்பரை காவல்துறையினர் தேடி  வருகின்றனர்.    விடுதலை ஆன இரு தினங்களில் மீண்டும் திருடி கைதான வாலிபர் விவகாரம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.