மலேசிய மன்னர் அவசரகால நடவடிக்கைக்காக ஆட்சியாளர்களுடன் ஆலோசனை

மலேசியா:
லேசிய மன்னர் ஆல் சுல்தான் அப்துல்லா பிரதமர் முஹைதின் யாசின் முன்மொழிவுகளை பற்றி விவாதிக்க மற்ற ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் என்று மலேசிய அரண்மனை இன்று தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது உள்ளிட்ட அவசர கால முன்மொழிவை முன்வைக்க முஹைதின் யாசின் நேற்று மன்னரைச் சந்தித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் ஒரு அதிகாரப் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ள, இது பிரதமர் மேற்கொண்ட முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியாவில் மீண்டும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருவதாலும், மன்னர் விரைவில் மற்ற மலாய் ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை நாட்டு நிர்வாகம் தொடர்ந்து சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை அல் சுல்தான் அப்துல்லா பெரிதும் புரிந்து கொள்கிறார் என்று அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அவசர முன்மொழிவை குறித்து முஹைதீன் அலுவலகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், மலாய் ஆட்சியாளர்கள் அனைவரும் நாளை சந்திப்பார்கள் என்று இந்த விவகாரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.