காமன்வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு!

மாலே:

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வெளியேறுவதாக அறிவித்து உள்ளது.

‘காமன்வெல்த்’  (Commonwealth) என்பது 54 சுதந்திர, இறையாண்மை வாய்ந்த  நாடுகளைக் கொண்ட ஒரு  தன்னார்வ கூட்டமைப்பாகும். 53 நாடுகள் கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பில் மாலத்தீவு  கடந்த 1982ம் ஆண்டு இணைந்தது. தற்போது உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி அந்த கூட்டமைப்பில் இருந்து விலகியுள்ளது.

காமன்வெல்த் முதன் முதலில் 1931-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அது ‘பிரிட்டிஷ் காமன்வெல்த்’ என அழைக்கப்பட்டது. 1949-ஆம் ஆண்டு  செய்யப்பட்ட லண்டன் பிரகடனத்தின்கீழ் புதிய காமன்வெல்த் கூட்டமைப்பு  நிறுவப்பட்டது.

இரண்டாவது எலிசபெத் அரசியார் இந்தக் கூட்டமைப்பின் தலைவராவார். இதன் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ளது.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன்
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன்

பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பின்புலன்களையுடைய  நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கூட்டமைப்பு, சிங்கப்பூர் காமன்வெல்த் பிரகடனத்தில் (1971)குறிப்பிடப்பட்டுள்ள மக்களாட்சி மலர ஊக்குவித்தல், மனித உரிமைகளைப் பேணுதல், சட்டநீதி, தடையிலா வாணிகம்,  நல்லாட்சி, தனிமனித உரிமை,  பன்னாட்டு உறவுகள், உலக அமைதி ஆகிய விழுமங்கள் மற்றும்  நோக்கங்கள்   அடிப்படையில் தனது செயல்திட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற காமன்வெல்த்  அமைச்சக நடவடிக்கை குழு கூட்டத்தில், மாலத்தீவு அரசியல் பிரச்னைகளை தீர்ப்பதில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என மாலத்தீவு குற்றம் சாட்டியது.

மேலும், கடந்த 2012ல் மாலத்தீவு அதிபர் நஜீத் ஊழலில் ஈடுபட்டு பதவி விலகியதை தொடர்ந்து அதிகாரத்தை மாற்றம் செய்வது குறித்தும்,  சட்டப்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்வும் குற்றம் சாட்டப்பட்டதுழ.

இதனால், ஜனநாயகம் என்ற பெயரில் தமக்கு  அநீதி இழைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய மாலத்தீவு, நேற்று காமன் வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.