சத்திஸ்கர் : பழுதான வாக்களிப்பு இயந்திரங்களால் பதட்டம்

ராய்ப்பூர்

த்தீஸ்க்ர் மாநிலந்தில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கத்தில் பல இடங்களில் வாக்க்ளிப்பு இயந்திரங்கள் பழுதானதால் பதட்டம் ஏற்பட்டது.

சத்திஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இந்த வாக்குப்பதிவின் போது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். ஏற்கனவே  முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த இடங்களில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இருந்த போதிலும் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த வக்குப் பதிவின் போது பல இடங்களில் வாக்களிப்பு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. தலைநகர் ராய்ப்பூரில் உள்ள நான்கு வாக்களிப்பு மையங்கள் உட்பட 132 இடங்களில் வாக்களிப்பு தொடங்கும் போது இயந்திரங்கள் செயல்படவில்லை. அதன் பிறகு அவற்றை பழுது பார்த்தனர்.

இதனால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் வாக்களிக்க காத்திருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்களிப்பு இயந்திரம் பழுது சரி பார்க்கப்பட்ட பிறகு வாக்களிக்க வந்த மக்கள் அது வரை எந்த வாக்கும் பதிவாகவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே வாக்களித்தனர்.