மகாராஷ்டிராவில் ஒரேஆண்டில் 20ஆயிரம் குழந்தைகள் பலி: பாஜ மாநில அரசின் மெத்தனம்

--

மும்பை:

காராஷ்டி மாநிலத்தில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, கடந்த ஓராண்டில் மட்டும் 20 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை மாநில பாஜக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மாநில பாஜ அரசின் மெத்தனம்  காரணமாகவே இவ்வளவு அதிகமான குழந்தைகள் இறந்திருப்ப தாக மாநில காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர்  தீபக் சவந்த். இவர் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிராவில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அங்கு கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் தீபக்,   குறைந்த எடை, குறை பிரசவம், பிறவி சுவாசக் கோளாறு, தொற்றுநோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களால் கடந்த 2017 ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுமார் 19,799 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக கூறினார்.

மேலும், குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க, தக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மாநிலத்தின் பெண்கள் நலம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் வாயிலாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகினன்றன.  பெண்கள் குழந்தை பெற்ற உடன் அடுத்த 42 நாள்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும், குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒரு வருடம் வரையிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும்  என்று அறிவித்து உள்ளார்.

மாநில   பொது சுகாதாரத்துறை இதுகுறித்து  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்,  கர்ப்பிணிப் பெண்களுக்கு முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடல் பருமனைப் பரிசோதிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மகாராஷ்டி மாநில அரசின் மெத்தனம் காரணமாக மாநிலத்தில் இவ்வளவு குழந்தைகள் இறந்திருப்பதாகவும், குழந்தைகள் இறப்பை  தடுக்கும் வகையில் மாநில அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.