பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிரிதர் மால்வியா நியமனம்

பனாரஸ்:

னாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நீதிபதி கிரிதர் மால்வியா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக நீதிமன்ற கூட்டத்தில் மால்வியா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 11 பேரில் முக்கியமானவர்கள் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பஞ்சாப் சிங், யூசி சிமத்ரி, பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி, குன்னர் ஆனந்த நாராயண் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கிரிதர் மால்வியா, 1988-1998 க்கு இடையில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

2016 ஆம் ஆண்டில், நீதிபதி மல்வியா தலைமையிலான நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு, கங்கை சட்டத்தை இயற்ற மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட வரைவில், மால்வியாவின் ஆலோசனைகளும் சேர்க்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.