மத்தியஅரசுக்கு எதிராக தமிழ்நாட்டிலேயும் தர்ணா நடந்திருக்க வேண்டும்: கமல்ஹாசன்

கோவை:

சிபிஐக்கு வைத்து மாநில அரசுகளை மிரட்டி வரும் மத்திய அரசுக்கு எதிராக, மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமலஹாசன் கூறினார்.

கோவை சென்ற கமதல்ஹாசன்  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பொள்ளாச்சியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள செல்வதாக தெரிவித்தவரிம், மம்தா பானர்ஜி போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல்,  மம்தா பானர்ஜி தொடர்ந்து வரும் தர்ணா போராட்டம் போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை எனவும், அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இது போன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என தமிழக அரசை கடுமையாக  விமர்சித்தார்.

பழைய வாக்குச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனதே என்ற  கேள்விக்கு, நவீனத்தை ஏளனப்படுத்தக்கூடாது எனவும், ஓட்டையுள்ள பக்கெட்டில் தண்ணீர் எடுக்க கூடாது, ஆனால் ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என கூறினார்.

சின்னதம்பியை கும்கியாக மாற்றும் முயற்சி குறித்த கேள்விக்கு, வாழ்வாதாரம் பாதிப்பது எனபது ஒருவிதம் என்றும் மிருகங்களின் இடத்தை நாம் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம் எனவும் அதற்கான விளைவுகளை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மற்றும் நீதிமன்றத்தில் அரசு பதில் ஆகியவற்றில் உள்ள முரண்பாடு குறித்த கேள்விக்கும் பதில் கூறியவர், அது அவர்களின் தனி குணாதிசியம் என்றும் இதில் வியப்பு இல்லை, இரு நாக்குடையவர்கள் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது இப்போது சொல்ல முடியாது, ஆனால் போட்டியிடுவோம் என தெரிவித்த கமலஹாசன் அதுகுறித்து இப்போது பேச முடியாது என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: central government, dharna protest, Kamal Haasan, Mamata Banerjee, parliment election, கமல்ஹாசன், சின்னத்தம்பி, நாடாளுமன்ற தேர்தல், மம்தா போராட்டம்
-=-