மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் வெளியேறி பா.ஜ.க.வில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜிப் பானர்ஜி நேற்று, பதவியை ராஜினாமா செய்தார், அவரும் பா.ஜ.க.வில் சேர திட்டமிட்டுள்ளார்.

பைஷாலி டால்மியா

“எனக்கு எதிராக மூத்த தலைவர்களே பிரச்சாரம் செய்கின்றனர்” என ராஜிப் பானர்ஜி குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு ஆதரவாக ஹவ்ரா மாவட்டம் பல்லி தொகுதி திரினாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைஷாலி டால்மியா கருத்து வெளியிட்டிருந்தார்.

“திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் முதுகில் குத்துவோரும், மவுனமாக இருந்து கொல்வோரும் உள்ளனர். அவர்களால் தான், கட்சியில் இருந்து அமைச்சர்கள் விலகி செல்கிறார்கள்” என பைஷாலி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பைஷாலியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது, கட்சி மேலிடம்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பைஷாலி, முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மகள்.

– பா. பாரதி