மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் திரினாமூல் காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.
இரு தினங்களுக்கு முன்பு பங்குரா என்ற பகுதியில் பிரச்சாரம் செய்த முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி’’ டெல்லி மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த இந்தி தலைவர்களை உள்ளடக்கிய கட்சி பா.ஜ.க.. வெளியூர்காரர்களான அவர்களுக்கு இங்கே என்ன வேலை?’’ என வினா எழுப்பினார்.


இதற்கு மே.வங்க பா.ஜ.க.. மாநில தலைவர் திலீப் கோஷ், பதில் அளித்துள்ளார்.

நடியா மாவட்டம் கிருஷ்நகர் என்ற இடத்தில் நேற்று நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய கோஷ்,’’பா.ஜ.க,வை வெளியூர் ஆட்கள் கட்சி என மம்தா பேசியுள்ளார். மே.வங்க மாநில தூதுவராக இந்தி நடிகர் ஷாரூக்கானை , மம்தா நியமித்துள்ளார். தூதுவராக நியமிக்க இங்கே வேறு நடிகர் இல்லையா? மக்களவை உறுப்பினரான தேவ், நல்ல நடிகர் கிடையாதா? ஷாரூக்கானை ஏன் நியமிக்க வேண்டும்? நீங்கள் வெற்றி பெற ‘’கான்’’ தேவைப்படுகிறார்’’ என சாடினார்.
ஏன் இந்த சாடல்?

மே.வங்க மாநிலத்தில் 30 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் வாக்குகளை பெரும் நோக்கத்தில் ,முஸ்லிம் நடிகரான ஷாரூக்கானை , மாநில தூதுவராக மம்தா பானர்ஜி நியமித்துள்ளார் என்பது பா.ஜ.க. தலைவர், திலீப் கோஷின் கருத்து..

-பா.பாரதி.