கொல்கத்தா :

மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அந்த மாநில முதல்-அமைச்சரும்.திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி “மே.வங்க மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை வருமான வரி துறையினர் மிரட்டி வருகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

இந்த அதிகாரிகளின் மனைவியர் சிலர் மத்திய அரசில் பணி புரிவதாக குறிப்பிட்ட மம்தா அவர்கள் தொலைதூர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

“மே.வங்காளத்தில் மத்திய படைகள் துணையுடன் சோதனைகள் நடத்தப்படுவதை ஏற்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒரு கட்சி மே.வங்காளத்தில் தினமும் கொரோனா வைரசை பரப்பி வருகிறது” என்றும் மம்தா குற்றம் சாட்டினார்.

– பா. பாரதி