கொல்கத்தா: லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி அறிவிக்கப்பட்ட நாடு முழுவதுமான பொதுமுடக்கம்செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் அன்லாக்-4 (தளர்வுகள்) அறிவிக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்துக்கள், இ-பாஸ் நடைமுறைகள், பொழுதுபோக்கு பூங்காங்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும், லாக்டவுன் குறித்து மாநில அரசுகள், மத்தியஅரசு அனுமதியின்றி ஏதும் அறிவிப்பு வெளியிடக்கூடாது என்று அறிவித்து உள்ளது.

இது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறையின் இந்த உத்தரவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஒரு மாநிலத்தின், குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொரோனா தொற்று குறித்த களநிலவரம் குறித்து மாவட்ட அதிகாரிகளுக்குத்தான் தெரியும். இப்படி இருக்கும்போருது, மாநிலங்களில் லாக்டவுனை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசால் எப்படி முடிவு செய்ய முடியும்.

இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை மத்திய அரசு நம்ப வேண்டும், லாக்டவுன் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும், இதுதான் நம்முடைய கூட்டாட்சியின் அடிப்படை.

இவ்வாறு கூறியுள்ளார்.