ராணுவத்தை மோடியின் படை என்பதா?: யோகி ஆதித்யநாத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா:

இந்திய ராணுவத்தை மோடியின் படை என கூறிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.


புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ராணுவ நடவடிக்கைகளை வாக்காக மாற்ற முயற்சித்து வருகின்றனர் என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில், இந்திய ராணுவத்தை மோடியின் படைகள் என்று உத்திரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் நாட்டின் சொத்து. ஆதித்யநாத்தின் இத்தகைய பேச்சு ராணுவத்தை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளார்.