3வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் அமோக வெற்றிபெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி, இன்று காலை பதவி ஏற்றார். அவருக்கு  மேற்குவங்க ஆளுநர்  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

294தொகுதிகளைக்கொண்ட மேற்குவங்கத்தில் 213 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார் மம்தா பானர்ஜி. இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.45 மணி அளவில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கு வங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகி உள்ளார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.