மக்களின் பாதுகாப்பு கருதி மீதமுள்ள தொகுதிகளின் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துங்கள் : மம்தா பானர்ஜி வேண்டுகோள்

 

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் எட்டு கட்டமாக நடத்தப்படுகிறது, இதில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீதமுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடந்த ஆலோசனை கூட்டத்திலேயே இத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்த நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.

தற்போது மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.