மம்தா பானர்ஜியின் சீன பயணம் திடீர் ரத்து

கொல்கத்தா:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சீன நாட்டிற்கு 9 நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இன்று இரவு சீனா புறப்பட திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை செயலாளர் கோகலேவும் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.