கொல்கத்தா:

மக்களவை தேர்தலில் 41% சீட்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
41% பெண் வேட்பாளர்களையும், 35% ஆண் வேட்பாளர்களையும் களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, டார்ஜிலிங் மக்களவை தொகுதியில் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா எம்எல்ஏ அமர்சிங் ராய் டார்ஜிலிங் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார்.  மக்களவை தொகுதியில் போட்டியிட 41% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிஜு ஜனதா தள வேட்பாளர்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.