வங்க மொழி தொலைக்காட்சி தொடர்களுக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா

ங்க மொழியில் வரும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துளார்.

தற்போது தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.   இந்த தொடர்களை அதிக அளவில் பெண்களும் குழந்தைகளும் ரசித்து பார்த்து வருகின்றனர்.   அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருந்த போதிலும் இந்த தொடர்களை வெறுப்பவர்களும் உள்ளனர்.

அவ்வகையில் வங்காள மொழி தொடர்களுக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.   அவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர்.   அவர் தொலக்காட்சி தொடர்களை தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார்.    சமீபத்தில் நடந்த கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு மம்தா சிறப்புரை ஆற்றினார்.

அப்போது மம்தா, “நாம் அடிக்கடி தொலைக்காட்சி தொடர்களை பார்க்க நேரிடுகிறது.  அதில் இன்று நான் பார்த்த ஒரு தொடரில் ஒருவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.   அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.   தயவு செய்து இது போல விஷயங்களை ஊக்குவிக்காதீர்கள்.  இது போல நேர்மறையான விவரங்கள் பலரது மனதையும் பாதிக்கக் கூடும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில பெண்கள் ஆணையத் தலைவரும் வங்க மொழி தொலைக்காட்சி தொடர்களை எழுதி இயக்குவருமான லீனா கங்கோபாத்யாய்,, ”நாங்கள் சாதாரண மக்களுக்காக தொலைக்காட்சி தொடர்களை உருவாக்குகிறோம்.    அனைத்து தொடர்களும் அப்படி இல்லை.  முதல்வர் அவருடைய சொந்தக்கருத்தை கூறி உள்ளார்.  என்னைப் பொறுத்த வரை தொலைக்காட்சி தொடர்களில் நேர்மறையான விவரங்கள் உள்ளதாக கூறுவது தவறானது”  எனத் தெரிவித்துள்ளார்.