எந்த மாநிலத்தவருக்கும் வங்காளத்தில் இடமுண்டு : மம்தா பானர்ஜி!

ன்க்ஸா, மேற்கு வங்கம்

ந்த மாநிலத்தவரும் மேற்கு வங்கத்துக்கு வசிக்க வரலாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்/

மேற்கு வங்க மாநிலம் பச்சிம் பர்தமான மாவட்டத்தில் உள்ள கன்ஸ்கா என்னும் இடத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டம் மேற்கு வங்கத்தை ஆளும் திருணாமுல் காங்கிரஸ் சார்பாக நடைபெற்றது.   இதில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ”மேற்கு வங்கம் என்றுமே யாரையுமே மதம், மாநிலம், சாதி என பிரித்து பார்த்து வெளி ஆட்கள் என கருதியதில்லை.   வங்காளம் ரவிந்திரநாத் தாகுர் மற்றும் நஸ்ருல் இஸ்லாம் வாழ்ந்த பூமி.   நாங்கள் அம்பேத்கார், காந்திஜி, சாமி விவேகானந்தா, மவுலானா அப்துல் கலாம் ஆசாத் என அனைவரையும் மதிப்போம்.   பிரிவினை வாதம் பேசுவோருக்கு வங்க மக்கள் நல்ல பாடம் புகட்டுவோம்.   எந்த மாநிலத்தவர் இங்கு வசிக்க வந்தாலும் நாங்கள் அவர்களை வரவேற்போம்.

இங்கு சாதி வேற்றுமை கிடையாது.  குஜராத் தில் ஒரு தலித் தாண்டியா விழாவில் கலன்ந்துக் கொண்டதற்கு கொல்லப்பட்டுள்ளார்.  பத்மாவதி திரைப்படத்தை வெளியிட அங்கு தடை செய்கின்றனர்.   ராஜஸ்தானில் ஒரு அப்பாவி மனிதர் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார்.   இன்னும் எத்தனை காலம் தான் இதை எல்லாம் நாம் அனுமதிக்கப்போகிறோம்?

வங்கத்தில் பாஜக பொய்ச் செய்திகள் மூலம் கலவரம் உண்டாக்க முயல்கிறது.    பழங்குடியினரையும்,  தலித்துகளையும் அங்கெல்லாம் கொன்று குவித்து விட்டு, இங்கு பழங்குடியினரை ஆதரிப்பதாக பொய் சொல்கிறார்கள்.   அவர்கள் பேச்சை கேளாமல் கவனமாக இருங்கள்.  நான் அனைவருடனும் சேர்ந்து பணி புரிய தயாராக உள்ளோம்.   மதத்தினால் நாம் என்றுமே வேறுபாடு காட்ட தெரியாதவர்கள்.

திருணாமூல் என்றுமே பாஜக வின் கலாச்சாரத்தை பின் பற்றாது.   நமக்கு அந்த கலாச்சாரம் பிடிக்காது.  நாம் எதையும் அரசியல் ரீதியாக எதிர் கொள்வோம்.    மற்றவர்களைப் போல் நாம் பிரிவினை பேச வேண்டாம். ” எனக் கூறி உள்ளார்.