பாஜக எதிர்ப்பு கூட்டணி : எதிர்க்கட்சிகளுடன் மம்தா மீண்டும் ஆலோசனை

டில்லி

ரும் 30 ஆம் தேதி அன்று பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 2019 ஆம் வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெறா பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெருமளவில் முயன்று வருகின்றன.    பாஜகவை ஆட்சியை விட்டு இறக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முனைந்து வருகிறார்.

இது குறித்து மம்தா பானர்ஜி ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,  மாயாவதி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.  தற்போது மம்தா மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்களுடன்  ஆலோசனை நடத்த உள்ளார்.   அதை ஒட்டி வரும் 29 ஆம் தேதி டில்லி வரும் அவர் 30 ஆம் தேதி எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திய முன்னிருத்த வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.   அதற்கு ஒரு சில எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லை.   அத்துடன் வேறு சில கருத்து வேறுபாடுகளும் எதிர்க்கட்சிகள் இடையே உள்ளன.  அது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர இந்த ஆலோசனைக் கூட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.