Random image

அன்னை தெரசா அறக்கட்டளைக்கு எதிராக பாஜக அவதூறு…..மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா:

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் ஒரு கிறிஸ்தவ மிஷனரி சகோதரிகள் பிறந்து 14 நாள் ஆன குழந்தையை ரூ.1.2 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ஒரு தம்பதியர் குழந்தைகள் நலக் குழுவை அணுகி புகார் அளித்ததை தொடர்ந்து இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக மிஷனரி அறக்கட்டளையை அன்னை தெரசா உருவாக்கினார். ஆனால் இன்று அவற்றை காப்பாற்ற இயலவில்லை. அவற்றுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் அவதூறுகள் பரப்பப்டுகிறது.

சகோதரிகள் பாஜக.வினரால் குறிவைக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டத்திற்குறிது. மிஷனரி சாரிட்டிகள் ஏழைகளுக்கு தொண்டு செய்யும் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.