களத்தில் இறங்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜீ… தான் ஒரு களப்பணியாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார் !!

கொல்கத்தா :

 

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கி இருக்கிறது, இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

விவசாய பொருட்கள் தேக்கம், தோட்ட பயிர்கள் வீணாவது, விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையிழப்பு தொடங்கி நகரங்களில் செய்தித்தாள் விநியோகம் செய்பவர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொல்கத்தா வீதிகளில் ஆய்வு நடத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கே சாலையோர காய்கறி வியாபாரி ஒருவரின் கடையில் மக்கள் அதிகம் கூடாமல் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நின்று வாங்க வலியுறுத்தியதோடு.

அவர்கள், நிற்க வேண்டிய இடத்தையும் தானே கோடு கிழித்து கொடுத்து அடையாள படுத்திவிட்டு சென்றார். தீ தீ யின் இந்த நடவடிக்கை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது , போதிய அவகாசமின்றியும், முறையான வழிகாட்டுதல் இன்றியும் தவித்த அதிகாரிகள், போலீசார் மற்றும் வியாபாரிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.