இணையத்தில் வைரலாகும் மம்மூட்டியின் புதிய லுக்….!

மீண்டும், ‘வயது குறைந்து காணப்படுகிறார் மம்மூட்டி. லாக் டவுனில் வர்க் அவுட் செய்து முடித்து தனது உடலை புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்டார்.

பகிரப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்கள் மம்மூட்டியின் புகைப்படத்திற்கு கமன்ட் செய்து வருகின்றனர் .

மம்முட்டி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். செல்ஃபிக்களில் மம்மூட்டியின் தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் 68 வயதாகும் மம்மூட்டி, புதிய படங்களுடன் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

ஷராபுதீனுடன், கணபதி, ரிமி டாமி, அமு சித்தாரா, சாரியம் மோகன் மற்றும் பலர் இன்ஸ்டாகிராம் பதிவில் கருத்து தெரிவித்தனர்.

அஜய் வாசுதேவ் இயக்கிய ஷைலாக், மம்மூட்டி நடித்த கடைசி படம் . சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் ஒரு படம் வெளி வரவுள்ளது .பிலால் 2 படப்பிடிப்பின் போது கோவிட் லாக் டவுனில் அனைத்தும் தடைபட்டுள்ளது .